ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை கடுமையாக அதிகரித்து வந்தது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று 1 கிராம் தங்கம் 65 ரூபாய் உயர்ந்து 1 கிராம் தங்கம் 5 ஆயிரத்து 600 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்றும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தது . ஒரு சவரன் 45 ஆயிர்த்தை தாண்டியுள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 520 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5.690ஆக விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ரூ.45,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

1 கிராம் தங்கம் 40 ரூபாய் குறைந்து ரூ.5,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.80.00 எனவும், 1 கிலோ வெள்ளி ரூ.80,000 எனவும் விற்பனையாகிறது.