இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை ஆனது கடந்த மாதம் தொடக்கம் முதலில் உச்சத்தை தொட்டது. இதன் பிறகு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் குறைந்து காணப்படுகிறது.

இதையடுத்து மே மாத தொடக்கத்தில் 46 ஆயிரம் ரூபாயாக அதிகரித்த தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் சற்று குறைய தொடங்கி உள்ளது சாமானியர்கள் மத்தியில் சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. குறிப்பாக தங்கம் விலை நேற்று முன்தின்ம் சவரனுக்கு ரூபாய் 464 குறைந்தது.

இந்த நிலையில் இன்று 22 காரட் ஆபர்ண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 5570க்கு விற்பனையாகிறது .அதேபோன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து 1 சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 44 ஆயிரத்து 560 ஆக உள்ளது.

அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூபாய் 77.70 காசுகள் ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 77 ஆயிரத்து 700 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.