இன்று சற்று குறைந்தது தங்கத்தின் விலை

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹112 குறைந்து விற்பனை ... தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்து உள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை ஆனது கடந்த மாதம் முதல் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த மே மாதம் தங்கத்தின் விலை 46 ஆயிரத்து எட்டியது. இதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், வார தொடக்கநாளான இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5536 ஆகவும் , சவரனுக்கு ரூபாய் 112 குறைந்து 1 சவரன் 44 ஆயிரத்து 288 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூபாய் 81.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 81, 500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.