சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: மத்திய அரசு தங்கத்தின் மீதான GST வரியை 3% அதிகரித்தியது. அதை தொடர்ந்து இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டது.இந்த இறங்குமதி உயர்த்தப்பட்ட ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ. 1000 வரை உயர்த்தது. அதன் பின் தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சற்று குறைந்து விற்கப்பட்டதால் நகை வாங்க மக்கள் சற்று ஆர்வம் காட்டினர். இதையடுத்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது .

எனேவ அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.4,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதை தொடர்ந்து வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.61.10க்கும் மற்றும் 1 கிலோ வெள்ளி ரூ.61,100க்கும் விற்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.