இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிகாரிப்பு

சென்னை: இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,040க்கு விற்பனை ...சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது.

இதையடுத்து நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.45,880க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று 1 கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் குறைந்து 1 கிராம் தங்கம் 5,735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.46,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,755-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி 1 கிராம் 80.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.