தக்காளி விலை கடும் சரிவு

இந்தியா : இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மாதம் தக்காளியின் வரத்து மிகவும் குறைந்த நிலையில் கிலோவுக்கு ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனையடுத்து, பருவமழை துவங்கிய நிலையில் தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது, தக்காளியின் கொள்முதல் தமிழகத்தில் உயர்ந்து உள்ளதால் தக்காளியின் விலை மொத்தமாக வீழ்ச்சியடைந்து உள்ளது.


அதாவது, சேலம் மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு தக்காளி கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.12 அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், 1 ட்ரே தக்காளியே ரூ.120 முதல் ரூ.150 வரை மட்டுமே விலை போவதாக வியாபாரிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

தக்காளியின் வரத்து தொடர்ந்து அதிகமாகி வரும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதால் சாகுபடி செய்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை என விவசாயிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.