கடும் வீழ்ச்சி அடைந்த தக்காளி

சென்னை: பெரும் நஷ்டத்தில் விவசாயிகள் ...இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தான் தக்காளி விலை உச்சத்திலிருந்தது. கிலோ ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்பட்டதால் தக்காளி இல்லாமல் எப்படி சமைப்பது என்பதே கூகிளில் அதிகம் தேடப்பட்ட விஷயமாக இருந்தது.

இந்த நிலையில் அரசு தக்காளி விலை அதிகரிப்பால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளியை விற்றது. இது வரலாற்றில் முதன்முறையாகும்.

இதனை அடுத்து உச்சத்திலிருந்த தக்காளி படிப்படியாக குறைய தொடங்கி தற்போது கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பலர் தக்காளியை நீண்ட நாள் வைத்து அது அழுகி போய் கீழே கொட்டுகின்றனர்.

இதற்கு முன்னதாக விலை உயர்வால் விவசாயிகளுக்கு பலன் கிடைத்தது. அதனால் அதன் சாகுபடியை விவசாயிகள் அதிகரித்தனர். ஆனால் தற்போது விலை குறைந்ததால் அந்த செலவை ஈடுகட்டுவது பெரும் சவாலாக இருக்கிறது.