அஜித்துடன் உள்ள சமுத்திரகனி புகைப்படம் செம வைரல்

சென்னை: அஜித்துடன் நடிகர் சமுத்திரகனி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெகு வேகமாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதுகுறித்து கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.


எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'துணிவு'. பஞ்சாப் வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதிக்கட்ட காட்சிகள் பாங்காக்கில் எடுக்கப்பட உள்ளது. இதற்காக விரைவில் அஜித் பாங்காக் செல்லவுள்ளார்.


இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சமுத்திரகனி, அஜித்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இதற்கிடையே இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமுத்திரகனிக்கு படத்தில் என்ன கேரக்டர் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.