ஜவான் படத்தில் 200 பெண் சண்டைக்கலைஞர்கள் பங்கேற்பு

சென்னை: ஜவான் சண்டைக்காட்சி... ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது.


தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்போது, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ’ஜவான்’ கிளைமேக்ஸ் சண்டைகாக நடிகர் ஷாருக்கான் பெண்களுடன் சண்டையிடும் காட்சி எடுக்கப்பட்டதாகவும் அதில் 200-க்கும் அதிகமான பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னை வந்து கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை - அனிருத். மேலும், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.