2018 படம் ஜூன் 7ம் தேதி ஓடிடியில் ரிலீஸ்

கேரளா: 2018 படம் ஜூன் 7ம் தேதி Sony Live OTD தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த 5ஆம் தேதி மலையாளப் படம் ‘2018’ வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 10 நாட்களில் 13 கோடி ரூபாய் வசூலித்து மலையாள சினிமா உலகில் மாபெரும் சாதனை படைத்தது.

இந்நிலையில் ‘2018’ திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கடந்த 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் முழு கதையையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.

அந்த மழை வெள்ளம் எப்படி ஏற்பட்டது? மக்களின் ஒற்றுமையையும், மக்கள் படும் அவலத்தையும் மிக நுணுக்கமாக படமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக அந்த ஒரு வார காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படி பாதிக்கப்பட்டது, என்னென்ன அவலங்களை சந்தித்தார்கள் என்பதை மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

மேலும் ‘2018’ திரைப்படம் மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதுவே படம் வெற்றிபெற உதவியது. மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் தமிழில் பெரும் நம்பிக்கையுடன் வெளியானது.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படம் ஜூன் 7ஆம் தேதி Sony Live OTD தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.