777 சார்லி படம் பார்த்துவிட்டு அழுத கர்நாடக முதல் - மந்திரி

ஜூன் 10-ம் தேதி வெளியான 777 சார்லி என்ற படத்தை இயக்குனர் கிரண்ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில், ரக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். கன்னடத்தில் உருவான இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றினார்.

இப்படம், 777 சார்லி என்ற நாயுடனான அன்பைச் சொல்லும் நகைச்சுவைப் படமாக வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இபபடத்தை கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை பார்த்துவிட்டு தான் வளர்த்த நாயினை நினைத்து அழுதுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படம் குறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில், 'நாய்களை பற்றிய பல படங்கள் உள்ளன. ஆனால் இந்த திரைப்படம் உணர்சிகள் மற்றும் விலங்குகளின் ஒத்திசைவை காட்டுகிறது. நாய் அதனுடைய கண்கள் வழியாக உணர்சிகளை வெளிப்படுத்துகிறது. இது ஒரு நல்ல திரைப்படம். இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். நாயின் அன்பானது நிபந்தனையற்ற அன்பு அது தூய்மையானது என்று கூறியுள்ளார்.

கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்று கடந்த ஆண்டு இறந்தது. அப்போது அதனை அவர் கட்டிப்பிடித்து கதறி அழுத புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது.