பெரிய மீசையுடன் புதிய தோற்றத்தில் நடிகர் அருண் விஜய்

வாரிசு நடிகராக இருந்தாலும் நடிகர் அருண் விஜய் பல ஆண்டுகள் கடுமையான போராட்டத்துக்குப் பின்னரே தற்போது தனக்கென ஒரு இடத்தை கோலிவுட்டில் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தற்போது ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று ’சினம்’ என்ற படம். குமாரவேலன் என்பவர் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஷபீர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று முதல் ’சினம்’ படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அருண் விஜய் தனது பகுதிக்கான டப்பிங் பணியை தொடங்கி உள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் இந்த பணியை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டப்பிங் பணியில் இருக்கும் அருண்விஜய் புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

இந்தப் படங்களில் அவர் பெரிய மீசையுடன் வித்தியாசமான காட்சி அளிக்கிறார். எந்த படத்திற்கு இந்த கெட்டப் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.