பல ஆண்டுகளுக்கு பின் கூட்டணி சேரும் நடிகர் ஜீவா - இயக்குனர் ராஜேஷ்

வெகு ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் ராஜேஷ்வுடன் கூட்டணி சேர்கிறார் நடிகர் ஜீவா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி. இவரது மகன் ஜீவா. ஆனால் எந்த பந்தாவும் இல்லாமல் சகஜமாக ஜீவா பழகுவதால் பல நடிகர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். அதேபோல் ஜீவாவின் படங்களும் முழுக்க முழுக்க பார்க்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சுறுசுறுப்பாக இருக்கும்.

ஜீவாவின் படங்களுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடையில் கொஞ்சம் மார்க்கெட்டை இழந்த ஜீவா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வளர்ந்து வரும் நடிகராக மாறிவிட்டார்.

அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டுமென தனக்கு 11 வருடத்திற்கு முன்பு சூப்பர் ஹிட் படம் கொடுத்து தன்னுடைய சினிமா மார்க்கெட்டை உயர்த்தி விட்ட சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளாராம்.

சிவா மனசுல சக்தி படத்தைப் போலவே இந்தப் படமும் மிக மிக கலகலப்பாக இருக்கும் என செய்திகள் வெளிவந்துள்ளன. எம் ராஜேஷ் கடந்த சில படங்களாக தோல்வியை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் சிவா மனசுல சக்தி படத்தை பார்ப்பதற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு காட்சிக்கு காட்சி சுவாரசியமாகவும் காமெடியாகவும் ரசிகர்களை சிரிப்பில் தெறிக்க விட்டிருப்பார்கள்.