நடிகர் கருணாஸ் மகள் திருமணம்... திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

சென்னை; நடிகர் கருணாஸ் மகள் திருமணம்... தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் கருணாஸ். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல்வேறு ஹீரோ வேடங்களில் நடிக்க ஆரம்பித்து சில படங்களில் நடித்தார். அதன் பிறகு சொந்த அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மனைவி கிரேஸ் கருணாஸ் பாடகியாக சினிமா துறையில் தீவிரமாக உள்ளார். மேலும் அவர்களது இளைய மகன் கென் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

கருணாஸ் குடும்பத்தைச் சேர்ந்த மூவருமே திரையுலக உறவினராக இருந்தாலும் இவர்களின் மகள் டயானா மட்டும் சினிமா பக்கம் வரவில்லை. டாக்டராக படிக்கும் டயானாவை கருணாஸ் அமைதியாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

கென் கருணாஸ் திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அதற்கு “வாழ்த்துக்கள் அக்கா, மாமா” என தலைப்பிட்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் என ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்