திரில்லர் படத்தில் நடித்துள்ள நடிகர் கதிர்... டிரைலர் வெளியானது

சென்னை: திரில்லர் வகை திரைப்படமாக கதிர் நடிக்கும் யூகி படம் உருவாகியுள்ளதாம். இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகு எதிர்பார்ப்பில் ஆழ்ந்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் 'யூகி'. மேலும் இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியம், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். யூகி தமிழ்-மலையாளம் உள்ளிட்ட இருமொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.


'யூகி' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூகி திரைப்படம் வருகிற 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.