மும்பையில் சச்சினை சந்தித்த நடிகர் சூர்யா... புகைப்படங்கள் வைரல்

சென்னை: நடிகர் சூர்யா நேற்று மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் 3டியில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா நேற்று மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.