பீஸ்டை விட கூடுதல் சம்பளம் பெற்ற நடிகர் விஜய்... வாரிசு படத்திற்குதான்

சென்னை: பீஸ்ட் படத்தை விட ரூ.45 கோடி கூடுதலாக வாரிசு படத்திற்கு நடிகர் விஜய் சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல்கள் உலா வருகிறது. அப்படியா என்று ரசிகர்கள் வாயை பிளக்கின்றனர்.

தெலுங்கு சினிமா வெற்றி இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைக்க கிடுகிடுவென்று வளர்ந்து வருகிறது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம். விஜய்யின் பீஸ்ட் படம் செம தோல்வியடைந்த நிலையில் வாரிசு படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கான படப்பிடிப்பு கிடுகிடுவென்று வளர்ந்து, அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ந்து தெரிவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து வருகின்றனர். டாப் கியர் போல் நாளை 4ம் தேதி மாலை 4 மணிக்கு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருக்கிறது என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் பீஸ்ட் படத்திற்காக ரூ. 80 கோடி வரை சம்பளம் பெற்று இருந்தார். இந்நிலையில் வாரிசு படத்திற்காக விஜய் ரூ.125 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளாராம். அதாவது பீஸ்ட் படத்தை விட வாரிசு படத்திற்கு ரூ.45 கோடி அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளார். இதை கேட்டு ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.