கணவர் பிறந்த நாளை லடாக்கிற்கு சென்று கொண்டாடிய நடிகை மைனா நந்தினி

சென்னை: நடிகை மைனா நந்தினி தனது கணவரின் பிறந்தநாளை லடாக்கிற்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டாடியுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாணி கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகையாக பிரபலம் அடையத் தொடங்கினார்.

இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம். சரவணன் மீனாட்சி தொடர்தான் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதன்பிறகு, பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் போன்ற சீரியல்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி படங்களில் நடித்து பிரபலமானார்.

முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தொடர்ந்து அவருக்கு படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவர் தனது கணவரின் பிறந்தநாளை லடாக் சுற்றுப்பயணத்துடன் கொண்டாடியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மைனா நந்தினிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.