நடிகை நயன் – விக்னேஷ் தம்பதியின் குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை: நடிகை நயன்- இயக்குனர் விக்கி தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. இவர்களின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

திரையுலகின் பிரபலங்களான இந்த தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர். உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நயன் -விக்கி தம்பதி தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக்கின் முதல் பிறந்தநாளை நெருங்கிய உறவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.