பிரபலங்கள் பட்டியலில் முதல் இடமாம் நடிகை சமந்தாவுக்கு

ஐதராபாத்: பிரபலங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் நடிகை சமந்தா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் சமந்தா, ‘புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா மாமா…’ பாடலுக்கு ஆடிய வளைவு நெளிவான நடனம் பான் இந்தியா ஸ்டாராக உயர்த்திவிட்டது. தற்போது சமந்தாவுக்கு இன்னொரு பெருமை கிடைத்துள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரபல தனியார் நிறுவனம் ஜூன் மாதம் நடத்திய கணக்கெடுப்பில் 2023 ஆம் ஆண்டின் பிரபலமான பெண் நட்சத்திரங்களில் சமந்தா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் 8வது முறையாக இந்த பெருமையை சமந்தா பெற்றுள்ளார்.

இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமந்தாவைத் தொடர்ந்து முறையே ஆலியா பட், நயன்தாரா, தீபிகா படுகோன், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, பூஜா ஹெக்டே மற்றும் அனுஷ்கா ஆகியோர் உள்ளனர். அந்தவகையில் இந்தி நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார் சமந்தா.

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள ‘குஷி’ படமும், ‘சிட்டாடல்’ என்ற வெப் சீரிஸும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. மயோசிடிஸ் காரணமாக சிகிச்சையைத் தொடர சமந்தா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.