திருமணம் குறித்த கேள்விக்கு அட்டகாசமான பதில் தந்த நடிகை ஷெரின்

சென்னை: எப்போது திருமணம் என்ற ரசிகரின் கேள்விக்கு அட்டகாசமான பதிலை தந்துள்ளார் நடிகை ஷெரின்.

தமிழில் நடிகர் தனுஷடன் இணைந்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஷெரின். தொடர்ந்து அவர் ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

படிப்படியாக சினிமா வாய்ப்புகள் குறைவே சினிமாவிலிருந்து காணாமல் போனார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் குண்டாக இருந்த நடிகை ஷெரின் தற்போது உடல் எடையை குறைத்து அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு மிக ஒல்லியாக மாறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ஷெரினிடம் ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு ஷெரின் Married to food என தெரிவித்து இருக்கிறார்.