நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜோடியானார் நடிகை வித்யா பிரதீப்

மாரி 2, தடம் படங்களில் நடித்து பிரபலமான வித்யா பிரதீப், தற்போது பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

வித்யா பிரதீப் சின்னத்திரையில் நாயகி தொடரிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் ‘எக்கோ’ என்னும் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார்

முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. தற்போது இதன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.