சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திய நடிகை

சம்பளம் ரூ.1 கோடியே 20 லட்சம் கேட்கிறாராம் .... மலையாளத்தில் வெற்றி பெற்ற 'பிரேமம்' என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் ஜோடியாக 'கொடி', அதர்வா ஜோடியாக 'தள்ளிப்போகாதே' போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

இதனை அடுத்து தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கில் அனுபமா நடிப்பில் வந்த படங்கள் தோல்வி அடைந்து அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வந்தன.

இந்நிலையில் நிகில் ஜோடியாக நடித்த 'கார்த்திகேயா-2' படம் வெளியாகி பெரும் வசூல் குவித்து உள்ளது. மீண்டும் நிகில் ஜோடியாக நடித்த '18 பேஜஸ்' படமும் வெற்றிகரமாக ஓடுகிறது.

இதனை அடுத்து இந்த 2 படங்களின் வெற்றியால் அனுபமா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரது மார்க்கெட்டும் எகிறி உள்ளது. எனவே பட வாய்ப்புகள் குவிகின்றன.

இதையடுத்து சம்பளத்தை 2 மடங்காக உயர்த்தி இருக்கிறாராம். ஏற்கனவே ரூ.60 லட்சம் வாங்கிய அவர் இப்போது. தயாரிப்பாளர்களும் அவர் கேட்ட தொகையை கொடுக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.