மீண்டும் ஒரே தினத்தில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்தி – கார்த்தி படங்கள்

சென்னை: ஒரே நாளில் ரிலீஸ்... நடிகர் சிவகார்த்திகேயனின் அயலானும், கார்த்தியின் ஜப்பானும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மூன்று ஆண்டுகளான நிலையில், கிராபிக்ஸ் பணி காரணமாக வெளியிடுவதில் தாமதம் நீடித்து வந்தது.

அனைத்து பணிகளும் முடிவடையும் சூழலில் இருப்பதால், அயலான் படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்படும் என்று கடந்த மாதம் படக்குழு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.