அஜித் ரசிகர்கள் உற்சாகம்... அடுத்த பாடல் இன்று வெளியாகிறது

சென்னை: அஜித் ரசிகர்கள் உற்சாகம்... இன்னும் கொஞ்சம் நேரத்தில் துணிவு படத்தில் இருந்து மணிக்கு ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழக வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது.

‘துணிவு’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் முதல் பாடல் வெளியானது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் துணிவு படத்தின் 2வது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இன்று மதியம் ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகிறது. படக்குழு புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ளது. ரசிகர்கள் இந்தப் பாடல் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.