நடிகர் தனுஷின் 44வது படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்!

நடிகர் தனுஷின் 44வது படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' மற்றும் 'கர்ணன்' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அவர் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் ஒரு படத்திலும் ’ராட்சசன்’ ராம் குமார் இயக்கும் படத்திலும் அவர் நடிக்க உள்ளார்

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் தனுஷின் 44 வது படம் என்றும் செய்திகள் வெளியாகின.

மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்த படத்தில் அனேகமாக தனுஷ் ஜோடியாக நித்யா மேனன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி தனுஷின் 44வது படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷின் 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் ஆகிய தனுஷின் படங்களுக்கு இசையமைத்த அனிருத், ஐந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் தனுஷ் படத்தில் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.