ஆக்வா மேன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு

ஆக்வா மேன் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் ஜேம்ஸ் வான் இயக்குகிறார். வரும் 2022ம் ஆண்டு படம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

2018ம் ஆண்டு வெளியான பிரமாண்ட ஹாலிவுட் படம் ஆக்வாமேன். கடலுக்குள் இருக்கும் ஒரு கற்பனை உலகத்தை பிரமிக்க தக்க வகையில காட்டிய படம். டிசி காமிக்ஸ் உலகை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது.

நாயகன் ஜேஸன் மோமோவுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. சூப்பர் ஹீரோ படமாக இருந்தாலும், கடலை மாசுபடுத்தும் மனிதர்களை பற்றியும் பேசிய படம்.

ஸா, இன்ஸிடியஸ், கான்ஜூரிங் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் வான் இயக்கியிருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் ஜேம்ஸ் வான் இயக்குகிறார். 2022ம் ஆண்டு டிசம்பர் மதம் படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் ஜேம்ஸ் வான் கூறுகையில், கடல் உலகில் இன்னும் பார்க்கப்படாத பல விஷயங்களை, புதிய உலகைக் காட்டுவேன். முதல் பாகத்தில் கடல் மாசு பற்றி பேசியது போன்று 2ம் பாகத்தில் இன்னும் தீவிரமாகவும், சமகால விஷயங்களைப் பேசும் படமாகவும் இருக்கும் என்றார்.