ஜெயம் ரவியின் பூமி திரைப்படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்பு

பூமி திரைப்படத்தின் இசை நாளை வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயம்ரவி 'பூமி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'பூமி' . இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் 'தமிழனென்று சொல்லடா ' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் நாளை ( 14ம் தேதி ) வெளியிடப்படும் என நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.