வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க உள்ள அஸீம் தாய்க்கு உடல்நலக்குறைவு

வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க உள்ள அஸீம் தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி நடந்து வருகிறது.

இதில் ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்' போன்ற டிவி சீரியல்கள் மூலம் ஃபேமஸான நடிகர் முஹம்மது அஸீம் வைல்ட் கார்ட் மூலம் நுழைய உள்ளார்.

இதற்காக 'கொரோனா' டெஸ்ட் எடுக்கப்பட்டு ஒரு ஹோட்டலில் குவாரண்டைனில் இருந்து வந்தார் அஸீம். இந்நிலையில் ஹோட்டலில் இருந்து அஸீம் சில நாட்களுக்கு முன்பு வெளியேறி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றதாக தகவல்கள் வெளியானது.

இதற்கு காரணம் அஸீமின் அம்மா அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவரை பார்க்கவே அங்கு சென்றார் என்றும் வெளியானது. தற்போது இது தொடர்பாக அஸீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது அம்மா குறித்து நீங்கள் கேள்விபட்டது உண்மை தான். அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடவுளின் ஆசீர்வாதத்தாலும், நல்ல மனிதர்களின் பிரார்த்தனையாலும் அவரது உடல் நலம் தேறி வருகிறது.

விரைவில் அவர் முழுமையாக குணமடைந்து விடுவார். எனது அம்மாவிற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.