பத்து தல படத்திற்காக பவானி சங்கர் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல்

சென்னை: பத்து தல படத்திற்காக பிரியா பவானி ஷங்கருக்கு ரூ.70 லட்சம்தான் சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சிம்பு நடிப்பில் பத்து தல படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. லாக்டவுன் காரணமாக அதிகம் தாமதமான இந்த படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக பத்து தல இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர். தற்போது பத்து தல படத்திற்காக பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.

70 லட்சம் ருபாய் தான் அவருக்கு சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தமான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.