நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதியானது

நடிகர் ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் வலம் வருபவர் ராம் சரண். இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் இவருக்கென்று ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் ராம் சரண்.

அவர் நடித்த மகதீரா திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. தமிழில் அந்த திரைப்படம் மாவீரனாக மொழி பெயர்க்கப்பட்டது. தமிழிலும் இந்த படத்திற்கு ஏக வரவேற்பு. இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் ராம் சரண்.