விடாமுயற்சி படக்குழுவினர் அஜர்பைஜான் பறந்தனர்

சென்னை: ஆரம்பிச்சுட்டாங்க... விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித்குமார், நடிகை த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜர்பைஜான் சென்றுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.

சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் குறித்து கேட்டதில், விரைவில் விடாமுயற்சி ஆரம்பமாகும் என அறிவித்து அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

நடிகர் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் கேட்டு தொல்லை செய்து வருகின்றனர். இவர்களின் ஆசைக்கேற்ப படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக 3 மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார். விரைவில் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.