டுவிட்டர் பக்கத்தில் திருமணம் நடந்ததாக தகவல்; இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம்

இயக்குனர் சீனு ராமசாமிக்கு திருமணம் நடந்து விட்டதாக வெளியான தகவலுக்கு தற்போது அவர் விளக்கமளித்துள்ளார்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தை இயக்கி அதில் தேசிய விருதும் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. அதன் பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், இடம் பொருள் ஏவல் உள்பட ஒருசில படங்களை சீனுராமசாமி இயக்கி உள்ளார்

இந்த நிலையில் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நிலையில் திடீரென அவரது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு திருமணம் நடந்து விட்டதாக ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டு பின்னர் அது நீக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சீனு ராமசாமி குறித்த திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.