கஸ்டடி படம் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு

சென்னை: கஸ்டடி படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

கஸ்டடி படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 68. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு தனது படங்கள் குறித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், ”நான் சீரியஸா படம் எடுத்தா ஓட மாட்டேங்குது. வெற்றிமாறன் சார் மாதிரி படம் எடுக்கணும்னு நினைச்சா ஸ்லோவா இருக்குனு சொல்றாங்க. ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொன்னு எதிர்பார்க்கிறாங்க. என் கிட்ட இருந்து எண்டடெயினர் தான் எதிர்பார்க்கிறாங்க. மங்காத்தா காமெடி படமா இல்ல. அது ஒரு ஹெயிஸ்ட் ஜானர் படம். அது சீரியஸான படம் தான். அதில் நான் எண்டர்டெயின்மென்ட் சேர்த்துட்டேன்.

கஸ்டடினு ஒரு படம் பண்ணேன். முதல்முறையா தெலுங்குக்கு பண்றோம். வேற மாதிரி படம் பண்ணலாம்னு நினைச்சேன். சீரியஸான படமா அந்தப் படம் பண்ணேன். தெலுங்குல எமோஷன்ஸ் கேட்கிறாங்க. எல்லாமே பாடம் தான். சினிமாவை பொறுத்தவரை எனக்கு எல்லாமே தெரியும் என யாராலும் சொல்ல முடியாது. கடைசி வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதனையடுத்து கஸ்டடி படத்தில் எமோஷனல் காட்சிகள் வேண்டும் என தயாரிப்பாளர் அழுத்தம் கொடுத்ததை மறைமுகமாக சொல்கிறாரோ எனவும் கஸ்டடி படத்தின் தோல்விக்கு இதுதான் காரணமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.