இந்த தீபாவளிக்கு எத்தனை படங்கள் ரிலீஸ் தெரியுங்களா?

சென்னை: இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித்தின் எந்தப் படமும் வெளியாகவில்லை. இரண்டாம் கட்ட ஹீரோக்களில் கார்த்தியின் படம் மட்டும் தீபாவளிக்கு வெளியாகிறது. இது தவிர மேலும் 3 தமிழ் படங்கள் வெளியாகின்றன.

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. ஜப்பான் என்ற ரவுடியைப் பற்றிய திரைப்படமாக இது உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபு நடித்த ரெய்டு மற்றும் அறிமுக இயக்குனர் ரா வெங்கட் இயக்கிய கீதா ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இதில் பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை தமன்னாவின் மலையாளப் படமான ‘பாந்த்ரா’வும் தீபாவளி அன்று வெளியாகிறது. இதில் ஹீரோவாக திலீப் நடிக்கிறார். பாலிவுட்டில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ள டைகர் 3 படம் வெளியாகிறது. இந்தப் படம் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

தெலுங்கில் ஸ்ரீலீலா, அபர்ணா தாஸ் நடித்த ‘ஆதிகேசவா’, போம்மனபோயின கிருஷ்ணா நடித்த ‘அந்தமைன ஜீவிடம்’, ஸ்ரீராம் நடித்த ‘எர்ரச்சிரா’ ஆகிய படங்கள் நவம்பர் 9-ம் தேதி வெளியாகிறது.இந்தியாவில் சல்மான் கானின் ‘டைகர் 3’ மட்டுமே பெரிய படம். மற்ற அனைத்தும் சிறுபடங்கள். ஹாலிவுட்டின் ‘தி மார்வெல்ஸ்’ நவம்பர் 10ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.