அங்கிள் பார்க்க வரமாட்டீங்கள்... குட்டி ரசிகைக்காக விஜய் செய்த செயல்

சென்னை: விஜய் அங்கிள் என்ன பாக்க வர மாட்டீங்களா...' என க்யூட்டாக கெஞ்சி அழும் குழந்தையின் குரல் கேட்டு, அந்தக் குழந்தைக்கு வீடியோ காலில் நடிகர் விஜய் பேசி மகிழ்வித்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் என்றாலே அவரது மேனரிஸம், நடிப்பு என அனைத்தும் எல்லோராலும் கவரப்படும். அமைதியான தோற்றத்துடன் புன்னகை தவழும் அவரது முகத்தைக் கண்டாலே குழந்தைகளுக்குக்கூட பிடித்துவிடும்.

அதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது ஒரு குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியிருந்தது. அதில், அந்த குழந்தை 'விஜய் அங்கிள் என்னை பாக்க வரமாட்டீங்களா...' என கெஞ்சும் குரலில் அழுதபடி கேட்க, அதற்கு அவரது அம்மா 'அங்கிள் வர மாட்டாங்க' என்று கூறி குழந்தையை ஆறுதல் படுத்தும்படியாக அந்த வீடியோ வெளியானது.

கொஞ்சும் குரலில் கெஞ்சும் இந்த குழந்தையின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் அந்த குழந்தையிடம் வீடியோ காலில் பேசி நலம் விசாரித்துள்ளார். இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.