ஈஸ்வரன் படத்தின் இசை பணிகள் நிறைவு; தமன் டுவிட்டர் பதிவு

இசையமைப்பு பணிகள் நிறைவு... இசையமைப்பாளர் தமன் ஈஸ்வரன் படத்தின் முழு இசை பணிகளும் நிறைவடைந்து விட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'ஈஸ்வரன்'. இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நந்திதா, பாலசரவணன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரடொக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் .