தீவிர அரசியலில் இறங்குகிறேன்... நடிகர் சுமன் அதிரடி அறிவிப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் நடிகர் சுமன் தீவிர அரசியலில் இறங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் நடிகை ரோஜா, நடிகர்கள் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் ஆகியோர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் சுமன் தீவிர அரசியலில் இறங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோமாட்டிப்பா கிராமத்தில் நேற்று நடந்த தனியார் நிகழ்ச்சியில் நடிகர் சுமன் கலந்து கொண்டார். அப்போது அவர், நான் அரசியலுக்கு வருவது உறுதி.

ஆண்டுதோறும் மழை மற்றும் பேரிடர் ஏற்படுவதால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிர் நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க எந்த அரசும் முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார். நடிகர் சுமன் பாஜக அல்லது தெலுங்கு தேசம் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.