மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: இன்று தேசிய மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இன்று (மார்ச்-8) சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. உலகில் அனைத்து பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில், ஊக்குவிக்கும் வகையில், தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனை அடுத்து நடிகரும் மக்கள் நீதிமயம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மகளிர் தினத்தை முன்னிட்டு ட்வீட்டில் தனது வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்வீட்டில், பெண்கள் இல்லாத துறை இல்லை என்றும், சாதிக்காத துறை இல்லை என்றும், இந்த நவயுகத்தில் உயர்ந்து நிற்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து என்று அவர் பதிவிட்டுள்ளார்.