விஜய் - பாண்டிராஜ் கூட்டணியில் குடும்ப சென்டிமென்ட் படம்; பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாம்!!!

மாஸ்டர் படத்தை முடித்துள்ள நடிகர் விஜய் அடுத்து யார் படத்தில் நடிப்பார் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார் என்று தெரிவித்தார்கள். இப்போது அந்த லிஸ்டில் இயக்குனர் பாண்டிராஜ் வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் இணைந்தாலே படம் சூப்பர் ஹிட் என்று அடித்து சொல்லிவிடலாம். அந்த வகையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் விஜய் அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இயக்குனர் பாண்டிராஜ் தொடர்ந்து குடும்ப சென்டிமென்ட் படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறார். விஜய்யும் தானும் குடும்ப சென்டிமென்ட் படங்களில் நடித்து வெகு காலம் ஆவதால் இயக்குனர் பாண்டிராஜை டிக் அடித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.