மதுபானக்கடைகள் திறப்பா? கொரோனாவை பரிமாறிவிடும் என்று அச்சப்படுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு

சென்னை: கொரோனாவை பரிமாறப் போகிறது... மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து, பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் மதுக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று அரசு தெரிவித்து விட்டது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் சொல்லவே வேண்டாம் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். ஆனால் குடிமகன்களுக்கு அது பெரிய விஷயமாகவே தெரியவில்லை.
மதுக்கடைகள் திறப்பதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

வட மாநிலங்களில் மதுபான கடைகள் முன்னால் குடிமகன்கள் திரண்டு மதுபானங்கள் வாங்கும் வீடியோவை பார்த்து விட்டு “இந்த வீடியோக்களை பார்க்கும்போது, எல்லா மதுபான கடைகளும் கொரோனாவை பரிமாறப்போகிறது என்று அச்சப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இவரைப் போலவே பலரும் மதுபானக்கடைகள் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.