படவாய்ப்பு குறையுது... திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம் ஹன்சிகா

சென்னை: படவாய்ப்புகளும் குறைந்துக்கிட்டே இருக்கு. இனிமே இப்படியே காலம் தள்ள முடியாது. மகா படமும் ஊத்திக்கிச்சு. அவ்வளவுதான் போதும் என்று முடிவு செய்து திருமணத்திற்கு நடிகை ஹன்சிகா தயாராகிவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என்று முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா. இவர் நடித்த 50வது படமான மஹா படம் சமீபத்தில் வெளியானது. தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். அதோடு முன்பை விட தனது உடல் கட்டையும் ஸ்லிம்மாக மாற்றி இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட இந்திய தொழிலதிபர் ஒருவரை அவர் மணக்கப்போவதாகவும், ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால் ஹன்சிகா தரப்பினர் கூறுகையில், தற்போது அவர் படப்பிடிப்பு ஒன்றில் இருப்பதாகவும், அவருக்கே தெரியாமல் எப்படி திருமணம் நிச்சயம் பண்ணினார்கள்” என்று தெரிவிக்கின்றனர். இனிமேல் ஹீரோயினாக நடிப்பது என்பது பலிக்காது என்பதால் திருமணத்திற்கு முடிவு செய்துள்ளார். நெருப்பில்லாமால் புகையுமா என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.