விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படமாக உருவாகவுள்ள ‘மகாராஜா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை 10ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 50வது படமாக மகாராஜா உருவாகவுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.