சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 26-ஆம் தேதி வெளியாகும்!

கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகிவரும் 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் தனது பகுதியின் டப்பிங் பணிகளை கார்த்தி தொடங்கி விட்டார் என்ற செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ளன. முதல் கட்டமாக 'சுல்தான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 'சுல்தான்' படத்தின் இந்த சூப்பர் அப்டேட் காரணமாக கார்த்தி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே தினத்தில்தான் விஜய்யின் 'மாஸ்டர்' மற்றும் சிம்புவின் 'சம்பவம்' ஆகிய திரைப்படங்களும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.