விளையாட்டு அமைப்புகள் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன - காஷ்யப்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து துறை விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பேட்மிண்டன் போட்டிகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வீர்கள் மற்றும் வீராங்கனைகள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளன.

இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீரர் காஷ்யப் கூறியதாவது:- ‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படும் வரை உலகம் முழுவதும் பெரிய விளையாட்டு போட்டிகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் எல்லோரும் சந்தேகத்துடனும், ஒருவித பயத்துடனும் தான் உள்ளனர்.

பயணக்கட்டுப்பாடு, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகள் இருக்கின்றன. அவை எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்று தெரியவில்லை. கொரோனாவின் தாக்கம் எப்போது குறையும் என்பது தெரியாததால் விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் முடிவு எதுவும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றன.’ இவ்வாறு அவர் கூறினார்.