கவின் படத்தில் அனிருத் தந்தை முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்

சென்னை: கவின் நடிக்க உள்ள புதிய படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவிச்சந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்றவர் சீரியல் நடிகர் கவின். அதன்பிறகு பெரிய திரையில் கவனம் செலுத்தி லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பிறகு சமீபத்தில் இவர் நடித்த டாடா படம் மாபெரும் வெற்றி பெற்றது.

படத்தில் சில பிரச்சனைகள் இருந்தாலும், சில உணர்வு ரீதியான சுரண்டல் காட்சிகள் இருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் ரசிகர்களை இப்படம் கவர்ந்துள்ளது.

இதனால் தற்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்பமான நடிகர்களில் ஒருவராக கவின் மாறியுள்ளார். இந்நிலையில், ரோமியோ பிக்சர்ஸ் ராகுலின் அறிமுக படமான, நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் முதல் படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் முக்கியமான காதல் கதை கொண்ட படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவிச்சந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.