தல கூடவே நடிச்சுட்டு வந்துட்டேன்; நடிகை சரண்யா ரவிச்சந்திரன் பெருமிதம்

தல-யை பார்ப்பதா? கூட சேர்ந்து நடிச்சுட்டே வந்துட்டேன் என்று நடிகை சரண்யா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி 90க்கும் மேற்பட்ட குறும் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் சரண்யா ரவிச்சந்திரன்.

காதலும் கடந்து போகும், வடசென்னை, இறைவி, ராட்சசன், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு மற்றும் ஜெயில் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சரண்யா ரவிச்சந்திரன் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள ஒரு ட்வீட்டில், ராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத், சூட்டிங் மூட் என ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு தனது புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதற்கு அவரது ரசிகர் ஒருவர் அப்படியே 'தல'யையும் சேர்த்து பார்த்துவிட்டு வந்து விடுங்கள் என்று கமெண்ட் செய்தனர்.

இதற்கு அவர்... தலய பாக்குறதா.. கூட சேர்ந்து நடிச்சுட்டே வந்துவிட்டேன் என பதிலளித்துள்ளார். அவரது இந்த பதிவு தல ரசிகர்கள் இடையே செம வைரலாகி வருகிறது.