மீண்டும் விறுவிறுப்பு அடையும் இந்தியன்-2 படப்பிடிப்பு

சென்னை: மீண்டும் விறுவிறுப்படைகிறது... ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமல், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் 30 நாட்கள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது