லோகேஷ் சொன்னதன் அர்த்தம் இதுவா?... விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: தளபதி 67 படத்திற்காக ஏற்கனவெ எடுத்த ப்ரோமோ வரும் பிப்ரவரி 3 -ம் தேதி வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து திரைத்துறையில் முன்னணி இடத்தை பிடித்துள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தளபதி விஜய்யுடன் தற்போது இரண்டாவது முறையாக கூட்டணி வைத்துள்ளார். இதற்கு முன்பு வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தளபதி 67 படத்தில் மிஸ்கின், மன்சூர் அலி கான், கெளதம் மேனன் போன்ற பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இதை அவர்களே பேட்டிகளில் தெரிவித்து விட்டனர்.

மேலும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கயிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் ஹிண்ட் பிப்ரவரி 1, 2, 3 என்று கூறினார். இது என்ன அப்டேட் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி இருந்தனர்.

இந்நிலையில் தளபதி 67 படத்திற்காக ஏற்கனவெ எடுத்த ப்ரோமோ வரும் பிப்ரவரி 3 -ம் தேதி வெளியாகும் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.