தளபதி விஜய்யின் தந்தை பாஜகவில் இணைகிறாரா?

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் தேர்வு செய்யப்பட்ட பின் திரையுலக பிரமுகர்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இன்னும் ஒரு சில பிரபலங்கள் இணையப் போவதாக வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே நேற்று நடிகை குஷ்பு திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விஷால் உள்பட இன்னும் ஒரு சில திரையுலக பிரமுகர்கள் பாஜகவில் இணைய போவதாக வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று காலையிலிருந்து தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பாஜகவில் சேர இருப்பதாக திடீரென சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பியது. இந்த வதந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தான் பாஜகவில் சேரப்போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.